சிவகங்கை : கொரோனா ஊரடங்கு காலத்திலும் சிறப்பு ஆசிரியர்களை முழுமையாக பணி செய்ய வலியுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் ஓவியம்,தையல்,இசை,லைப் ஸ்டைல் போன்ற பாடங்களுக்கான சிறப்பு ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு பகுதிநேர அடிப்படையில் மாதம் 12 நாள் மட்டுமே பணி வழங்கப்படும்.இதற்கு மாதம் ஒரு சிறப்பு ஆசிரியர் ரூ.7700 சம்பளம் பெறுகின்றனர். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், பள்ளிக்கு மாணவர்கள் வரத்து இல்லாவிட்டாலும், ஆசிரியர்கள்,பள்ளி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் சுழற்சி முறையில் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிறப்பு ஆசிரியர்களையும் 50 சதவீத அடிப்படையில் அழைக்காமல், பள்ளி செயல்படும் நாட்களை போன்றே வழக்கம் போல் அனைத்து சிறப்பு ஆசிரியர்களையும் பள்ளிக்கு அழைக்கின்றனர்.இதனால் பெரிதும் பாதிக்கப்படுவதாக, சிறப்பு ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE