சென்னை:பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் 'அம்மா' திருமண மண்டபங்களை, முதல்வர் பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில், கள்ளக்குறிச்சி, திருவாரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், கடலுார், தஞ்சாவூர் மாவட்டங்களில், 27.16 கோடி ரூபாய் மதிப்பில், 11 பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தில், 12.22 கோடி ரூபாய் மதிப்பில், கொரட்டூர் மற்றும் வேளச்சேரியில், 22.61 கோடி ரூபாய் மதிப்பிலும், அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லுாரில், 10.75 கோடி ரூபாய் மதிப்பில், 32 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.இவை அனைத்தையும்,முதல்வர் பழனிசாமி., தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE