காரைக்குடி : காரைக்குடியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் குரங்குகளால் சிறுமியின் உயிர் பறிபோனது.
காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் சுற்றித் திரிகிறது. குரங்கு கூட்டம் நடமாட்டத்தால் வீடுகளை விட்டு மக்கள்வெளியே வர அஞ்சுகின்றனர்.சில தினங்களுக்கு முன் சுப்பிரமணியபுரத்தில்உள்ள கோயில் ஒன்றில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகள் குரங்கு வருவதை பார்த்து பயந்து ஓடினர். அதில், பிரித்திகா என்ற 6 வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
ஆடிட்டர் இளையபெருமாள் கூறுகையில், செக்காலை முதல் வீதி முதல் சுப்பிரமணியபுரம் வடக்கு முழுவதும் குரங்குதொல்லை அதிகளவில் உள்ளது. மாடி விட்டு மாடி தாவியும்,வீடாக சென்றும் உணவு பொருட்களை காலி செய்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஒரு சிறுமியின் உயிர் பறிபோனது வேதனை அளிக்கிறது. மேலும் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE