பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையை காக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

Added : நவ 24, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேளாண் துறை சார்பில், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குளத்தில் கனமழை, புயலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 8, 652 எக்டேர் பரப்பளவில் தென்னைமரங்கள் உள்ளன. இவை புயலின் போது பலத்த காற்று மழையால் பாதிக்காத வகையில் இளம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வேளாண் துறை சார்பில், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குளத்தில் கனமழை, புயலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தம் 8, 652 எக்டேர் பரப்பளவில் தென்னைமரங்கள் உள்ளன. இவை புயலின் போது பலத்த காற்று மழையால் பாதிக்காத வகையில் இளம் மட்டைகளை தவிர்த்து மீதமுள்ள காய்ந்தவைகள், இளநீர், தேங்காய்களை அகற்ற வேண்டும். நீர் பாய்ச்சுவதை நிறுத்தினால் மண்ணில் நன்றாக இருகி, மரம் பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் எனகூறினார். ராமநாதபுரம் சப்கலெக்டர் சுகபுத்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, வேளாண் இணை இயக்குனர் குணபாலன், துணை இயக்குனர் சேக் அப்துல்லா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X