பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு நான்கு புதிய வென்டிலேட்டர் கருவிகள்

Added : நவ 24, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நான்கு புதிய வென்டிலேட்டர் கருவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் நலன் கருதி ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு, ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு ராயல்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் லேக் நோனா லஞ்ச் சார்பில் ரூ.26 லட்சம் மதிப்பிலான நான்கு புதிய

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நான்கு புதிய வென்டிலேட்டர் கருவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் நலன் கருதி ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு, ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு ராயல்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் லேக் நோனா லஞ்ச் சார்பில் ரூ.26 லட்சம் மதிப்பிலான நான்கு புதிய வென்டிலேட்டர் கருவிகள் வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து கருவிகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார். சுகாதாரத்துறை சார்பில் இரண்டு நடமாடும் புகை தெளிப்பு வாகனங்களையும் துவக்கி வைத்தார்.

அரசு மருத்துவக் கல்லுாரி டீன் அல்லி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்கள் செந்தில்குமார், இந்திரா, ரோட்டரி முன்னாள் கவர்னர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, ரோட்டரி தலைவர்கள் புகாரி, கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X