பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் டாக்டர்கள் பொது சுகாதாரத் துறை உத்தரவு

Added : நவ 24, 2020
Share
Advertisement
சென்னை:'நிவாரண முகாம்களில், முறையாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; டாக்டர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:* அனைத்து மாவட்டங்களிலும்

சென்னை:'நிவாரண முகாம்களில், முறையாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும்; டாக்டர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* அனைத்து மாவட்டங்களிலும் தேவையான, 'ஜெனரேட்டர்' வசதியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.'டார்ச் லைட், பேட்டரி' போன்ற அனைத்து வசதிகளும், தயார் நிலையில் இருக்க வேண்டும்

* புயல், நாகை -- விழுப்புரம் இடையே கரையை கடக்கும் என்பதால், அந்த பகுதியில் உள்ள, அனைத்து சுகாதார நிலையங்களுக்கும், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மீட்பு பணிகளுக்கு, எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

* நீர் தேங்கும் இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நிவாரண முகாம்களில், முறையாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பூச்சிகள் கட்டுப்பாட்டு குழு, எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

* ஒவ்வொரு மணி நேரத்திற்கும், பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பான தகவலை, மாவட்ட பேரிடர் ஆணையத்தில் இருந்து பெற வேண்டும். துணை இயக்குனர் தலைமையில் கட்டுப்பாட்டு அறையை உருவாக்க வேண்டும். முக கவசம், 'சானிடைசர்' தேவையான அளவில் வைத்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்

* அனைவரையும் உரிய முறையில் சோதனை செய்ய வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்க வேண்டும்

* உணவு பாதுகாப்பு துறை அதிகரிகள், நிவாரண முகாம்களில் அளிக்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், உடனடி கண்காணிப்பு குழுக்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். தண்ணீரில் குளோரின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X