பொது செய்தி

தமிழ்நாடு

200 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடு

Added : நவ 24, 2020
Share
Advertisement
கூடலுார்:முதுமலை வனப்பகுதியில், 200 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்க, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில், பருவ மழையை தொடர்ந்து, தற்போது, அதிகாலையில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் செடிகள், தாவரங்கள் கருகி வருகின்றன. பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதால், வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.இதை தடுக்க,

கூடலுார்:முதுமலை வனப்பகுதியில், 200 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்க, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில், பருவ மழையை தொடர்ந்து, தற்போது, அதிகாலையில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் செடிகள், தாவரங்கள் கருகி வருகின்றன. பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதால், வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.இதை தடுக்க, முன்னெச்சரிக்கையாக, 200 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்க, வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனால், பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதுமலை துணை இயக்குனர் செண்பகபிரியா கூறுகையில், ''பனிப்பொழிவு மற்றும் கோடையில் வனத்தீயை தடுக்க, முன்னெச்சரிக்கையாக, தீ தடுப்பு கோடுகள் அமைக்க, தேசிய புலிகள் ஆணையம் சார்பில், முதல் கட்டமாக, 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி, விரைவில் துவங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X