திருக்கோவிலுார் : புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை காப்பது குறித்து திருக்கோவிலுார் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருக்கோவிலுார் போலீசார் பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொள்ளும் வகையில் மரம் அறுக்கும் இயந்திரம், கயிறு மற்றும் ஜே.சி.பி., உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
டி.எஸ்.பி., ராஜூ மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் மற்றும் போலீசார் பொதுமக்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போலீஸ் நிலைய வளாகத்தில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE