பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் கவுன்சிலிங் டிச., 1 வரை நீட்டிப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நிவர்' புயல் காரணமாக, டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பல்கலை மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் அறிக்கை:இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு இடஒதுக்கீடு கவுன்சிலிங், நவ., 26ல் துவங்கி, 28 வரை நடப்பதாக இருந்தது. 'நிவர்' புயல் காரணமாக, டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நவ., 30 காலை, முன்னாள் ராணுவ

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், 'நிவர்' புயல் காரணமாக, டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் அறிக்கை:இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு இடஒதுக்கீடு கவுன்சிலிங், நவ., 26ல் துவங்கி, 28 வரை நடப்பதாக இருந்தது. 'நிவர்' புயல் காரணமாக, டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நவ., 30 காலை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மதியம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங் நடக்கும்.

டிச., 1 காலை, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், மாலை தொழில்முறை கல்வி பாடப்பிரிவு சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கும் கவுன்சிலிங் நேரடியாக நடக்கும்.டிச., 2ல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு, இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், இ - மெயில் மற்றும் மொபைல் எண் வாயிலாக தெரிவிக்கப்படும்.

டிச., 7 முதல், டிச., 24 வரை, சான்றிதழ் சரிபார்ப்புக்காக, ஒவ்வொரு நாளும், 600 மாணவர்கள் அழைக்கப்படுவர். பின், தற்காலிக இடஒதுக்கீடு கடிதம் வழங்கப்படும். அனைத்து விபரங்களையும், https://tnauonline.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X