கோவை:வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், இனி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் கடைசி வாரத்திலிருந்து, அரசு அலுவலகங்களுக்கு மக்கள் செல்ல முடியாமல், ஆன்லைன் வாயிலாகவே பணிகளை செய்து வந்தனர்.இயல்பு நிலை திரும்பியதையடுத்து, வழக்கமாக விடுமுறையிலிருக்கும் சனிக்கிழமைகளிலும், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் முழுமையாக செயல்பட துவங்கியுள்ளன.சனிக்கிழமைகளில், பழகுனர் உரிமம், லைசென்ஸ், பர்மிட், முகவரிமாற்றம், வாகனவரி செலுத்துதல், பர்மிட் ரத்து செய்தல் உள்ளிட்ட, அனைத்துப்பணிகளையும் மேற்கொள்ளலாம். இதற்கென்று சிறப்புக்கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கூறுகிறார், வட்டார போக்குவரத்து அலுவலர் குமாரவேல்.அவர் மேலும் கூறுகையில், ''அரசின் உத்தரவின்படி, வாரநாட்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், சனிக்கிழமையன்றும் மேற்கொள்ளப்படும், காலை 9:30 மணிக்கு துவங்கும் அலுவலகம், மாலை 6:30 மணி வரை செயல்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE