விழுப்புரம் : நிவர் புயலின் தாக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், விழுப்புரத்தில் பேரிடர் அவசர கால மைய அலுவலகம் பூட்டி கிடப்பதை அதிகாரிகள் கவனிக்காமல் உள்ளனர்.
தமிழகத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதை யொட்டி, விழுப்புரம் உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அரசு மற்றும் காவல், தீயணைப்பு துறைகளை சேர்ந்தோர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.
இயற்கை சீற்றங்களின் பாதிப்பு ஏற்படும் போது, அதில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்காக பேரிடர் மீட்பு குழு அரசு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம் அவசர கால உதவி மையம் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திற்குள் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் பல மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியுள்ளதால் புதர்கள் மண்டி, பராமரிப்பின்றி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE