பொது செய்தி

தமிழ்நாடு

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் மனு

Added : நவ 25, 2020
Share
Advertisement
விழுப்புரம் : பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மனு கொடுத்தனர்.தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுத்துள்ள மனு; தமிழகத்தில் கடந்த 2011-12ம் கல்வி ஆண்டில் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றோம்.இதையடுத்து, எங்களுக்கு 2,700 ரூபாய் மட்டுமே ஊதியம் உயர்த்தி

விழுப்புரம் : பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுத்துள்ள மனு; தமிழகத்தில் கடந்த 2011-12ம் கல்வி ஆண்டில் இருந்து பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றோம்.இதையடுத்து, எங்களுக்கு 2,700 ரூபாய் மட்டுமே ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த ரூ.7,700 தொகுப்பூதியத்தில் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டமாக உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம் வழங்கவில்லை. இதனால், ஒவ்வொருவரும் ரூ.60 ஆயிரம் இழந்து தவிக்கின்றோம். போனஸ், பண்டிகை முன்பணம், ஏழாவது ஊதியக்குழு, 30 சதவீத ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட எதுவும் இதுவரை வழங்கவில்லை.எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X