மரக்காணம் : கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் வானுார் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் நிவர் புயல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தார்.
கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகத்தில் நிவர் புயல் பாதுகாப்பு குறித்து அனைத்துதுறை அதிகாரிகளுடன் வானூர் எம்.எல்.ஏ., சக்ரபாணி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் கூறித்து பேசப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளுடன் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனஎம்.எல்.ஏ., சக்கரபாணி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மின்துறை அதிகாரிகள் மற்றும் மீனவ பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE