விழுப்புரம் : நிவர் புயல் தாக்கத்தை யொட்டி, முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில், கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில், பஸ் சேவை நிறுத்தப்பட்டு, பணிமனைக்கு பாதுகாப்பாக பஸ்கள் கொண்டு செல்லப்பட்டது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் இன்று (25ம் தேதி) புதுச்சேரி - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதையொட்டி, விழுப்புரம், கடலுார், செங்கல்பட்டு, நாகை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தை யொட்டி, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று மதியம் 1.00 மணி முதல் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று மதியம் 1.00 மணிக்கு பின், விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, மொத்தம் 1,350 அரசு பஸ்கள் பணிமனைக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE