செஞ்சி : நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து கலெக்டர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கலெக்டர் அண்ணாதுரை செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முக சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை தனித்துணை ஆட்சியர் சண்முக சுந்தரம்.தாசில்தார் ராஜன், டி.எஸ்.பி., இளங்கோவன், பி.டி.ஓ., அறவாழி, பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் கனகராஜ், பேரூராட்சிசெயல் அலுவலர் தெய்வீகன், தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, மின் வாரியம், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தாழ்வான பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பாக தங்க வைக்கவேண்டும், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அளவில் நிதியை அரசு ஒதுக்கி இருப்பதால் தாமதமின்றி மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நிவாரண பணிகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE