திண்டிவனம் : விழுப்புரம் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு, நிவர் புயலை முன்னிட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சிஅளிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அதிகாரிகள் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், முதலியார்சாவடி, தந்திராயன்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு, மருத்துவக்குழுவினரால், முதலுதவி மருத்துவ பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் விஜயபாஸ்கர், மருந்தாளுநர் அனிதா, செவிலியர் பரசுராமன் ஆகியோர் பங்கேற்று,முதல் உதவி சிகிச்சை அளிப் பது குறித்து விளக்கம் அளித்தனர்.விழுப்புரம் மாவட்ட டி.ஐ.ஜி., சத்தியபிரியா, எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10 டி.எஸ்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE