அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால்': பா.ஜ.,முருகன் எச்சரிக்கை

Updated : நவ 26, 2020 | Added : நவ 25, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
கரூர் : ''தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு வரவிட்டால், தமிழகம் குட்டிச் சுவராகி விடும்,'' என, மாநில, பா.ஜ., தலைவர் முருகன் கூறினார்.கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று காலை, பா.ஜ., சார்பில் வெற்றிவேல் யாத்திரை, பொதுக்கூட்டம், மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் நடந்தது. மாநில, பா.ஜ., தலைவர் முருகன் பேசியதாவது: ஹிந்து மதம், தமிழகத்துக்கு எதிராக உள்ள தீயசக்திகளை, அடையாளம் காணும்
DMK, BJP, Murugan

கரூர் : ''தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு வரவிட்டால், தமிழகம் குட்டிச் சுவராகி விடும்,'' என, மாநில, பா.ஜ., தலைவர் முருகன் கூறினார்.

கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று காலை, பா.ஜ., சார்பில் வெற்றிவேல் யாத்திரை, பொதுக்கூட்டம், மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் நடந்தது.

மாநில, பா.ஜ., தலைவர் முருகன் பேசியதாவது: ஹிந்து மதம், தமிழகத்துக்கு எதிராக உள்ள தீயசக்திகளை, அடையாளம் காணும் வகையில் தொடங்கப்பட்டுள்ள, வேல் யாத்திரைக்கு பொதுமக்கள், முருக பக்தர்கள் ஆதரவு உள்ளது. தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு பெருகி வரும் ஆதரவை பொறுக்க முடியாமல், கலவரம் வரும் எனக் கூறி, யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என, தி.மு.க., கூட்டணி கட்சிகள் கேட்கின்றன. கலவரம் செய்வதே அவர்கள் தான்.

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த, கருப்பர் கூட்ட தலைவர் செந்தில் வாசன், தி.மு.க., - ஐ.டி., பிரிவில் இருந்தவர். தற்போது, அவர்களுக்கு, தி.மு.க., தான் சட்ட ரீதியாக உதவிகளை செய்து வருகிறது. கருப்பர் கூட்டத்தை இயக்குவதே, தி.மு.க., வும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான்.

தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு வரவிட்டால், தமிழகம் குட்டிச் சுவராகி விடும். பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், குரல் கொடுக்கும் கனிமொழி, தன் கட்சி எம்.எல்.ஏ., பூங்கோதை விஷயத்தில், மவுனம் சாதிப்பது ஏன்? இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலர் சீனிவாசன், துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட, பா.ஜ.,நிர்வாகிகள் பங்கேற்றனர்.பின், வேல் யாத்திரைக்கு புறப்பட்ட முருகன் உள்ளிட்ட, பா.ஜ.,வினரை, போலீசார் கைது செய்து, சில மணி நேரங்களில் விடுவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
25-நவ-202023:54:58 IST Report Abuse
chakra பிஜேபி வந்தால் என்ன செய்வோம் என்று சொல்லுங்க இன்னோர் உத்தர பிரதேசம் அல்லது மத்திய பிரதேசமா ?
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
27-நவ-202016:25:25 IST Report Abuse
R MURALIDHARANபின் தங்கிய மாநிலங்களான உத்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததை காட்டிலும் எல்லா வகையிலும் முன்னேற்றி உள்ளார்கள்...
Rate this:
Cancel
25-நவ-202022:26:57 IST Report Abuse
ஆப்பு இன்னிக்கி வேல் யாத்திரை போனீங்களா? இல்லை நிவர் புயலுக்கு பயந்து வீட்டிலேயே இருந்தீங்களா?
Rate this:
Cancel
Kannan S - Anupuram,இந்தியா
25-நவ-202019:54:25 IST Report Abuse
Kannan S தினம் தினம் கொல்லப்பட்ட தமிழக மீனவர் இன்று நிலைமை என்ன என்பதை தமிழக மக்கள் புரிந்தால் திராவிட கட்சிகளுக்கு ஒட்டு போட மாட்டார்கள். தமிழக மக்களை பிரச்னையில் வைத்து கொள்ளுவது திராவிடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X