கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வங்கி துணை ஊழியர் நியமன விதி அரசிதழில் வெளியிட உத்தரவு

Added : நவ 25, 2020
Share
Advertisement
மதுரை:இந்தியன் வங்கியில், துணை ஊழியர்கள் நியமனம் தொடர்பாக விதிமுறைகள், தகுதிகளை அரசிதழில் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.இந்தியன் வங்கியில், துணை ஊழியர்கள் நியமனத்திற்கு சிலர் விண்ணப்பித்தனர். அதை, வங்கி நிர்வாகம் நிராகரித்ததை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு, 'துணை ஊழியர்களை,

மதுரை:இந்தியன் வங்கியில், துணை ஊழியர்கள் நியமனம் தொடர்பாக விதிமுறைகள், தகுதிகளை அரசிதழில் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்தியன் வங்கியில், துணை ஊழியர்கள் நியமனத்திற்கு சிலர் விண்ணப்பித்தனர். அதை, வங்கி நிர்வாகம் நிராகரித்ததை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு, 'துணை ஊழியர்களை, கிளைகளில் தற்காலிமாக நியமித்து, பின் எழுத்தர் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. துணை ஊழியர் நியமனம் தொடர்பாக, வங்கியில் விதிமுறைகள் இல்லை' என தெரிவித்தது.வங்கி தரப்பு, 'காலிப் பணியிட அறிவிப்பு வெளியிட படும். விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதிகள் அடிப்படையில், நியமனம் மேற்கொள்ளப் படும். மனுதாரர்கள், நேரடி நியமனம் கோர முடியாது' என தெரிவித்தது.

நீதிபதி உத்தரவு:வங்கியில், துணை ஊழியர்கள் நியமனம் தொடர்பான, நிலையான விதிகள் இல்லை என தெளிவாகிறது. பொது வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு அளித்து, விதிகள்படி நியமனம் மேற்கொள்ள வேண்டும். மனுதாரர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாது.வங்கியில், துணை ஊழியர்கள் நியமனம் தொடர்பாக, விதிமுறைகள் வகுக்கப் படாத பட்சத்தில், தகுதிகள் பற்றி, அரசிதழில் வெளியிட நீதிமன்றம் விரும்புகிறது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனுதாரர்களுக்கு தகுதி இருக்கும் பட்சத்தில், தேர்வு நடைமுறையில் பங்கேற்க தடையில்லை.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X