பொது செய்தி

தமிழ்நாடு

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

Added : நவ 25, 2020
Share
Advertisement
விழுப்புரம் : தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;சமூக, நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முதல்வரால் விருது வழக்கப்பட்டு வருகின்றது. அதன்படி 2020-21ம்

விழுப்புரம் : தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;சமூக, நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முதல்வரால் விருது வழக்கப்பட்டு வருகின்றது. அதன்படி 2020-21ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020-21ம் ஆண்டில் சமூக வகுப்பு நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு நற்பெயர் பெற்ற நபர்களுக்கு கபீர் புரஸ்கார்விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் http://mha.nic.in/sites/upload_files/mha/files/pdf/Kabir-Puraskar-Scheme.pdf என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 27ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், அண்ணா அரசு கலை கல்லுாரி அருகில் கீழ்பெரும்பாக்கம், விழுப்புரம் 605 602 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் வேலை நாட்களில் நேரிலோ, அல்லது 7401703485 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X