கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புறம்போக்கு நிலத்துக்கு உரிமை கோரிய மனு; கோர்ட் தள்ளுபடி

Added : நவ 25, 2020
Share
Advertisement
கோவை:கோவையில் புறம்போக்கு நிலத்துக்கு உரிமை கோரிய குடும்பத்தினரின் மனு, கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.கோவை அருகேயுள்ள கீரணத்தம், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ஜெயம்மாள், அன்புராஜ் குடும்பத்தினர், அன்னுார் தாலுகா, கீரணத்தம், டைடல் பார்க் பகுதியிலுள்ள, 2.86 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு உரிமை கொண்டாடினர்.இந்நிலத்தில், விவசாயம் செய்து வருவதாக கூறி, பட்டா கேட்டு

கோவை:கோவையில் புறம்போக்கு நிலத்துக்கு உரிமை கோரிய குடும்பத்தினரின் மனு, கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.கோவை அருகேயுள்ள கீரணத்தம், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ஜெயம்மாள், அன்புராஜ் குடும்பத்தினர், அன்னுார் தாலுகா, கீரணத்தம், டைடல் பார்க் பகுதியிலுள்ள, 2.86 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு உரிமை கொண்டாடினர்.இந்நிலத்தில், விவசாயம் செய்து வருவதாக கூறி, பட்டா கேட்டு அன்னுார் தாலுகா ஆபிசில் விண்ணப்பித்தனர். அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்க, அதிகாரிகள் மறுத்து விண்ணப்பத்தை நிராகரித்தனர்.இதை எதிர்த்து, ஜெயம்மாள், அன்புராஜ் குடும்பத்தினர் கோவை மூன்றாவது உரிமையியல் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தனர்.இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்த மனுவில், 'அரசுக்கு சொந்தமான அந்த இடம், நீர் நிலை புறம்போக்கு பகுதியான சாம்பிராணி குட்டை எனப்படும் குளம். தற்போதும் அங்கு நீர் நிறைந்து காணப்படுகிறது. மனுதாரர்கள் அந்த இடத்தில் விவசாயம் செய்துள்ளதாக, பொய்யான தகவலை அளித்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தனர்.விசாரித்த நீதிபதி பிரவீனா, ''அரசுக்கு சொந்தமான இடத்தை, யாரும் உரிமை கோர முடியாது. புறம்போக்கு நிலத்துக்கு உரிமை கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X