மதுரை:'கிளப்'கள் மற்றும் ஓட்டல்களுக்கு பார் உரிமம் வழங்கியதில், விதிமீறல் தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன, எடுத்த நடவடிக்கை என்ன?' என, கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு:கும்பகோணம் புதிய ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே ஒரு மனமகிழ் மன்றம் - கிளப் உள்ளது. அருகே பள்ளி, வழிபாட்டுத் தலம், மருத்துவமனைகள் உள்ளன.
இங்கு பார் நடத்த அனுமதித்தால், 'குடி'மகன்களால் மக்களுக்கு இடையூறு ஏற்படும். விபத்துகள் நடக்கும்.பார் உரிமம் வழங்க ஆட்சேபித்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர், தஞ்சாவூர் கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பார் உரிமம் வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்
.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:தமிழகம், கேரளாவில் பலர், மதுவுக்கு அடிமையாகி விட்டனர். தமிழகத்தில் மதுவால், இரண்டு தலைமுறைகள் பாதித்து உள்ளன. கலாசாரம், உடல்நலம், வருவாய் பாதித்து உள்ளது.மாநிலத்தில், ஐந்து ஆண்டுகளில் எத்தனை பார்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
கிளப்கள், ஓட்டல்களுக்கு பார் உரிமம் வழங்கியதில், விதிமீறல் தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் டிச., 7ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE