மரக்காணம் : கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார் சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்திற்கு அவசர அவசரமாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரியமுதலியார் சாவடியில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டடம் உள்ளது. பேரிடர் காலத்தில் பொது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கட்டப்பட்ட புயல் பாதுகாப்பு மையத்திற்கு தார் சாலை வசதி இது வரை இல்லை.அவசர காலத்தில் வாகனங்கள் வருவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
தற்போது நிவர் புயல் காரணமாக மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் திடீரென கட்டடத்திற்கு வரும் வழியிலும் கட்டடத்தை சுற்றிலும் அவசர அவசரமாக சாலை அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். நேற்று மழை பெய்ததால் சாலை பணிகள் தடை பட்டது. கட்டடம் கட்டி பல ஆண்டுகள் கடந்தும் இது வரை சாலை வசதி செய்யாமல் இப்போது சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE