கோவை:கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திலுள்ள பயன்படுத்தப்படாத நுழைவுவாயில்கள், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பராமரிப்பு செலவை தவிர்ப்பதற்காகவும், சுவர் வைத்து மறைக்கப்பட்டு வருகின்றன.வடக்கு திசையில் அமைந்துள்ள பழமையான கட்டடத்தினுள் நுழைய, பிரதான நுழைவுவாயில்கள் மூன்று உள்ளன. இது தவிர, சுற்றுச்சூழல் அறிவியல் துறை மற்றும் அண்ணா அரங்கம் செல்வதற்கு, வடக்குதிசையில் இருந்த நுழைவாயில் அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE