கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன் ரம்மி' தடைக்கு கோர்ட் பாராட்டு

Added : நவ 25, 2020
Share
Advertisement
மதுரை:'ஆன்லைன் ரம்மி' விளையாட்டை தடை செய்து, அவசர சட்டம் கொண்டு வந்த தமிழக அரசை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டியது. மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார், 'ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். விசாரித்த நீதிபதிகள், 'ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய, அவசரச் சட்டம் அல்லது சட்டத் திருத்தம் கொண்டு வர, எத்தகைய நடவடிக்கை

மதுரை:'ஆன்லைன் ரம்மி' விளையாட்டை தடை செய்து, அவசர சட்டம் கொண்டு வந்த தமிழக அரசை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டியது.

மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார், 'ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். விசாரித்த நீதிபதிகள், 'ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய, அவசரச் சட்டம் அல்லது சட்டத் திருத்தம் கொண்டு வர, எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தமிழக அரசுத் தரப்பில் நவ., 24ல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.

நீதிபதிகள், என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, 'அவசர சட்டம் கொண்டு வந்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது' என தெரிவித்தது. நீதிபதிகள், 'தமிழக அரசை பாராட்டுகிறோம்' எனக் கூறி, தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X