திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் ஆனந்த், 32; ஜெயராஜ், 51, உள்ளிட்டவர்கள், மாரியம்மன் அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளனர்.
இவர்கள், பொதுமக்களிடம், 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு, 6,100 ரூபாய் கட்டினால் போதும் எனவும் கூறி, 300க்கும் மேற்பட்டோரிடம், 1.50 கோடி ரூபாய்கு மேல் பெற்றுள்ளனர்.பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டபோது, தராமல் ஏமாற்றினர்.
இது குறித்த புகார்படி, திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மாரியம்மாள், நிவேதா அறக்கட்டளைகள், சிங்கம் மார்க்கெட்டிங் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, ஜெயராஜ், ஆனந்த் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE