பொது செய்தி

தமிழ்நாடு

பின்னலாடை துறை இயக்கம் துவங்கியது!

Added : நவ 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும், பண்டிகை விடுமுறைக்கு பின், நேற்று முதல் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன.தீபாவளிக்காக, 13ம் தேதி முதல், நிறுவனங்கள், பின்னலாடை தொழிலாளருக்கு விடுமுறை அளித்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகளவு ஆர்டர்கள், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது. கைவசம்

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும், பண்டிகை விடுமுறைக்கு பின், நேற்று முதல் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன.தீபாவளிக்காக, 13ம் தேதி முதல், நிறுவனங்கள், பின்னலாடை தொழிலாளருக்கு விடுமுறை அளித்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து அதிகளவு ஆர்டர்கள், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது. கைவசம் ஆர்டர் அதிகம் உள்ள நிறுவனங்கள், கடந்த 19ல் மீண்டும் இயக்கத்தை துவக்கின.சற்று ஆர்டர் குறைந்த ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும், நேற்று முதல் மீண்டும் இயக்கத்தை துவக்கியுள்ளன.சொந்த ஊர் சென்று திரும்பியதால், பெரும்பாலான தொழிலாளர்கள், திருப்பூரிலேயே தீபாவளி கொண்டாடியுள்ளனர். அவர்கள், கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு, மீண்டும் பணிக்கு திரும்பி வருகின்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:வெளிநாடுகளிலிருந்து, திருப்பூர் நோக்கி, ஆடை உற்பத்தி ஆர்டர்கள் அதிகளவு வந்துகொண்டிருக்கின்றன. பண்டிகை விடுமுறை முடிந்து தொழிலாளர்கள் மீண்டும் பணியில் இணைந்து வருகின்றனர்.வடமாநில தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்டனர்; தமிழக தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படுகிறது.அவ்வப்போது ரயில்கள் இயக்கப்படுவதால், சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதை உணர்ந்து, தமிழக தொழிலாளர்கள் விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X