பொது செய்தி

தமிழ்நாடு

பச்சை மிளகாய் விலையில் 'காரம்' குறைந்து விற்பனை

Added : நவ 25, 2020
Share
Advertisement
திருப்பூர்:வரத்து அதிகரித்ததால், பச்சை மிளகாய் விலை குறைந்து, சந்தையில் கிலோ, 12 ரூபாய் விற்கப்படுகிறது.திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக, 2.5 டன் பச்சைமிளகாய் விற்பனைக்கு வரும். கிலோ, தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். வரத்து குறையும் போது கிலோ, 50 ரூபாயை எட்டும். சீசன் துவக்கம், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சந்தைக்கு நான்கு நாட்களாக, நான்கு

திருப்பூர்:வரத்து அதிகரித்ததால், பச்சை மிளகாய் விலை குறைந்து, சந்தையில் கிலோ, 12 ரூபாய் விற்கப்படுகிறது.திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக, 2.5 டன் பச்சைமிளகாய் விற்பனைக்கு வரும். கிலோ, தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். வரத்து குறையும் போது கிலோ, 50 ரூபாயை எட்டும். சீசன் துவக்கம், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சந்தைக்கு நான்கு நாட்களாக, நான்கு டன் பச்சை மிளகாய் வருகிறது. வழக்கத்தை விட, 1.5 டன் மிளகாய் அதிகமாக வருவதால், விலை குறைந்துள்ளது. நேற்று முதல் ரகம் கிலோ, 12 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லறை விலையில் கிலோ, 15 ரூபாய்க்கு மிளகாய் விற்கப்படுகிறது.தக்காளி விலை உயர்வுதொடர் மழை காரணமாக கடந்த வாரம் கிலோ, பத்து ரூபாயாக இருந்த தக்காளி விலை மெல்ல உயர்ந்து கிலோ, 16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தரமான முதல் ரகம் கிலோ, 18 ரூபாய். 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 240 ரூபாய்க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X