சென்னை:நிவர் புயல் அச்சுறுத்தல் எதிரொலியாக, மாநிலம் முழுதும், 10.92 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, கடலுார், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பாதிப்பு ஏற்படும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பேரிடரால் ஏற்படும் இழப்பில் இருந்து தப்ப, பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என, வேளாண்துறை வாயிலாக விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையடுத்து, 10.92 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்களை, 16.55 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இரண்டு நாட்களில் மட்டும், 3 லட்சம் ஏக்கருக்கு விரைந்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 25 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற பயிர்களை விட, நெல் பயிர்களுக்கு அதிக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE