பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை மரங்களுக்கு 'மொட்டை'

Added : நவ 25, 2020
Share
Advertisement
சென்னை:'நிவர்' புயல் அச்சுறுத்தல் காரணமாக, தென்னை மரங்களை விவசாயிகள், 'மொட்டை' அடித்துள்ளது, வேளாண் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், நெல் பயிர்கள் மட்டுமின்றி, தென்னை மரங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.ஆலோசனைதென்னை மரங்களில் இருந்து
 தென்னை மரங்களுக்கு 'மொட்டை'

சென்னை:'நிவர்' புயல் அச்சுறுத்தல் காரணமாக, தென்னை மரங்களை விவசாயிகள், 'மொட்டை' அடித்துள்ளது, வேளாண் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், நெல் பயிர்கள் மட்டுமின்றி, தென்னை மரங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.ஆலோசனைதென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் மட்டுமின்றி, ஓலைகள், தேங்காய் நார் உள்ளிட்டவை வாயிலாகவும், விவசாயிகளுக்கு கணிசமாக வருவாய் கிடைத்து வருகிறது.

கடந்த, 2018ம் ஆண்டு வீசிய, 'கஜா' புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், 60 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்நிலையில், 'நிவர்' புயல், டெல்டா மாவட்டங்கள் பக்கம் செல்லலாம் என, வானிலை மையம் எச்சரித்ததால், தென்னை மரங்களை பாதுகாக்கும் வகையில், வேளாண் துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது.

'புயலின் வேகத்தில் இருந்து, மரங்களை பாதுகாக்க, நன்கு வளர்ந்த நிலையில் உள்ள இளநீர் மற்றும் தேங்காய்களை அறுவடை செய்ய வேண்டும். மரங்களின் கீழ் பகுதியில் உள்ள ஓலைகளை வெட்டி அகற்றிவிட்டு, குருத்தோலைகளை அப்படியே விட வேண்டும்' என, கூறப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில், மரத்தில் உள்ள காய்களை அகற்றாமல், ஓலைகள் மட்டுமே அகற்றப்பட்டு உள்ளன. இதனால், புயல் காற்றின் வேகத்தில் காய்கள் கீழே விழுவதுடன், மரத்திற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


கேள்வி



பல இடங்களில், மரம் முழுதும் உள்ள ஓலைகள் மட்டுமின்றி, குருத்து ஓலைகளும் வெட்டப் பட்டு, மரங்கள் மொட்டை ஆக்கப்பட்டுள்ளன. இதனால், அவை மீண்டும் வளருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வேளாண் துறை கூறிய ஆலோசனைக்கு மாறாக, விவசாயிகள் நடந்து கொண்டது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள ஆய்வுக்கு சென்று, உரிய ஆலோசனைகளை வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் வழங்கியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

மாவட்டம் கண்காணிப்பு அலுவலர் மொபைல் எண்

செங்கல்பட்டு சமயமூர்த்தி, செயலர், போக்குவரத்து துறை- 97187 33070
காஞ்சிபுரம்- சுப்ரமணியன், பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் 94440 31873

திருவள்ளூர் பாஸ்கரன், கமிஷனர், நகராட்சி நிர்வாகத்துறை 73388 40000

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X