கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் கட்டுமானங்கள்: அரசுக்கு உத்தரவு

Added : நவ 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:விதிமீறல் கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அரசு மற்றும் மாநகராட்சி பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2015ல் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இருந்து, அதிகாரிகள் பாடம் கற்றதாக தெரிய வில்லை எனவும், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.நோட்டீஸ் சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ருக்மாங்கதன் தாக்கல் செய்த மனு:சென்னை

சென்னை:விதிமீறல் கட்டுமானங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அரசு மற்றும் மாநகராட்சி பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2015ல் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் இருந்து, அதிகாரிகள் பாடம் கற்றதாக தெரிய வில்லை எனவும், நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.


நோட்டீஸ்

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ருக்மாங்கதன் தாக்கல் செய்த மனு:சென்னை மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில், 5,674 விதிமீறல் கட்டடங்கள் உள்ளன; 1,191 கட்டடங்களுக்கு பணி நிறுத்த நோட்டீஸ்; 679 கட்டடங்களுக்கு, 'சீல்' வைப்பதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், 115 இடங்கள் தான் பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ளன. மற்ற கட்டடங்கள் குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை எடுப்பதில், தேர்ந்தெடுத்தே அதிகாரிகள் செயல்படுகின்றனர். அவர்களின் தன்னிச்சையான நடவடிக்கையை, இது காட்டுகிறது. அதிகாரமிக்கவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என, யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஐந்தாவது மண்டலத்தில் உள்ள விதிமீறல்கள் குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. சிலருக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பி விட்டு, சில கட்டு மானங்களை தேர்ந்தெடுத்து, சீல் வைத்து, மற்றவர்களை விட்டு விடுகின்றனர். குறிப்பிட்டவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர்.


அனுமதி

அனுமதியில்லாத கட்டுமானங்களில், இதர காரணங்களுக்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. ஒரு மண்டலத்தில் மட்டும் விதிமீறல் கட்டுமானங்கள், 5,000 இருந்தால், மற்ற மண்டலங்களையும் சேர்த்தால், 1 லட்சம் வரை வரும்.பணி நிறுத்த நோட்டீசை தொடர்ந்து, மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.நகரமைப்பு திட்ட சட்டப்படி, அனுமதியில்லாத கட்டுமானங்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டங்கள் இருந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என, நீதிபதிகள் கண்டித்தனர்.


எச்சரிக்கை

சென்னையில், ஒரு மண்டலத்திலேயே இவ்வளவு விதிமீறல் கட்டுமானங்கள் என்றால், தமிழகம் முழுதும் நிலை என்ன கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்றங்கள் உத்தரவுகள் பிறப்பித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.

கடந்த, 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பின்னும், அதிகாரிகள்பாடம் கற்றதாக தெரிய வில்லை என்றனர்.விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி, அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, டிச., 22க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

அன்று, மாநகராட்சி ஆணையர், ஐந்தாவது மண்டல உதவி ஆணையர் ஆஜராகவும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பதில் மனு திருப்தியாக இல்லை என்றால், தலைமை செயலர், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
25-நவ-202007:55:47 IST Report Abuse
natarajan s நமது ஊருக்கு எவ்வித சட்டங்களும் தேவை இல்லை, எந்த சட்டம் போட்டாலும் அதை மீறுவதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது அதிலும் இந்த கட்டட விதி மீறல், தி நகர் கட்டிட விதி மீறல் உச்ச நீதி மன்றத்தில் தூங்குகிறது அரசியல் வாதிகளுக்கு என்று தனியாக ஒரு எழுதப்பட சட்டம் உள்ளது. எந்த விதி மீறல் என்றாலும் பின்னணியில் ஒரு அரசியல் தலையீடு இருக்கும். நீதி மனங்களுக்கு தெரியும் இது அதி காரிகளால் நிகழ்த்தப்பட்டது இல்லை என்று, அவர்களை எதுவும் செய்ய சட்டத்தில் இடமில்லை அதனால் அவ்வப்போது அதிகாரிகளை சாடுகிறார்கள். இந்த கமிஷனர் நீதிமன்றத்தில் வந்து நின்றால் எல்லாம் சரி செய்து விட முடியுமா? சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் அவர் மாற்றப்படுவார், அடுத்து வருபவர் எதற்கு நமக்கு வம்பு நமது Political பாஸ் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடப்போம் என்று இருந்து விடுகிறார. .ஒழுக்கமற்ற தலைமையால் ஒரு சமுதாயமே சீரழிகிறது.சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தை மீறும் பொது யார் என்ன செய்ய முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X