துபாய்;கடந்த 10 ஆண்டுகளில் சாதித்த, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் கோஹ்லி, அஷ்வின் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படும். இதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள நட்சத்திரங்களின் பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதன்படி, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய கேப்டன் கோஹ்லி, தமிழக 'சுழல்' வீரர் அஷ்வின் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் முன்னாள் கேப்டன் தோனி, ரோகித் சர்மா, விராத் கோஹ்லி பரிந்துரைக்கப்பட்டனர்.சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு இந்தியா சார்பில் கோஹ்லி மட்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.சிறந்த 'டுவென்டி-20' போட்டி வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் கோஹ்லி, ரோகித் சர்மா பரிந்துரைக்கப்பட்டனர்.சிறந்த 'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருதுக்கு இந்தியா சார்பில் தோனி, கோஹ்லி பரிந்துரை செய்யப்பட்டனர்.சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலி ராஜ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியா சார்பில் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி, மிதாலி ராஜ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.மற்ற அணிகள்பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மற்ற அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விபரம்:சிறந்த கிரிக்கெட் வீரர்: ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), சங்ககரா (இலங்கை).சிறந்த ஒருநாள் போட்டி வீரர்: மலிங்கா (இலங்கை), மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), சங்ககரா (இலங்கை).சிறந்த டெஸ்ட் வீரர்: வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹெராத் (இலங்கை), யாஷிர் ஷா (பாகிஸ்தான்).சிறந்த 'டுவென்டி-20' வீரர்: ரஷித் கான் (ஆப்கன்), இம்ரான் தாகிர் (தென் ஆப்ரிக்கா), ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா), மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெய்ல் (விண்டீஸ்)'ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்' விருது: வில்லியம்சன் (நியூசிலாந்து), பிரண்டன் மெக்கலம் (நியூசிலாந்து), மிஸ்பா (பாகிஸ்தான்), அன்யா ஸ்ருப்சோல் (இங்கிலாந்து), கேத்ரின் புரூன்ட் (இங்கிலாந்து), மகிளா ஜெயவர்தனே (இலங்கை), டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து).
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE