பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய அணியில் வெற்றிடம்: என்ன சொல்கிறார் ஸ்டீவ் ஸ்மித்

Added : நவ 25, 2020
Share
Advertisement
சிட்னி:''ஒருநாள், 'டுவென்டி-20' தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லாதது வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல, டெஸ்டில் கோஹ்லியின் விலகல் பாதிப்பை ஏற்படுத்தலாம்,'' என, ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், 'டுவென்டி-20' தொடரில்

சிட்னி:''ஒருநாள், 'டுவென்டி-20' தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இல்லாதது வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல, டெஸ்டில் கோஹ்லியின் விலகல் பாதிப்பை ஏற்படுத்தலாம்,'' என, ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்கு பின், கேப்டன் விராத் கோஹ்லி நாடு திரும்புகிறார்.இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கூறியது: ஒருநாள், 'டுவென்டி-20' போட்டிகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோகித் சர்மா திகழக்கிறார். 'டாப்-ஆர்டரில்' நம்பிக்கை அளித்து வரும் இவர் இல்லாதது இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தலாம். இதேபோல, முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் கேப்டன் கோஹ்லி விலக இருப்பது, பேட்டிங் வரிசையில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.இருப்பினும் இம்முறை இந்திய அணிக்கு திறமையான பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் பேட்டிங்கில் அசத்திய மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், 'டாப்-ஆர்டரில்' சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இவர்கள், ரோகித், கோஹ்லியின் இடத்தை பூர்த்தி செய்வர் என நம்புகிறேன்.இவ்வாறு ஸ்மித் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X