பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை இதுவரை தாக்கிய புயல்கள்

Added : நவ 25, 2020
Share
Advertisement
* 1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை. * 2008 நவ., 26: 'நிஷா' புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.  2010 நவ., 1: 'ஜல்' புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பாதிப்பு இல்லை.* 2011 டிச.,: 'தானே'

* 1994 அக்., 31: வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், சென்னை அருகே, 130 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. கன மழைக்கு, 60 பேர் பலியாகினர். 2004க்கு முன் புயலுக்கு பெயர் நடைமுறை இல்லை.

* 2008 நவ., 26: 'நிஷா' புயல், நாகபட்டினம் - காரைக்கால் இடையே மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது.  2010 நவ., 1: 'ஜல்' புயல், சென்னை அருகே மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது; பாதிப்பு இல்லை.

* 2011 டிச.,: 'தானே' புயல் புதுச்சேரி - கடலுார் இடையே மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் கரையைக் கடந்தது. பயிர்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின

* 2012 அக்., 31: 'நீலம்' புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது; 85 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது

* 2016 டிச., 12: 'வர்தா' புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது. 130 கி.மீ., மேல் காற்று வீசியது; 10 பேர் பலியாகினர்; 10 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்தன

* 2017 நவ., 30: அரபிக்கடலில் உருவான, 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட கன மழையால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது

* 2018 நவ., 18: 'கஜா' புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டன

* 2020 நவ., 25: வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X