பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விளைபொருட்களுக்கு மவுசு அதிகளவில் பயன்படுத்த அழைப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
அன்னுார்:'ரசாயனம் கலக்காத விளை பொருட்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது' என, விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விவசாயிகள் கூட்டம், வடவள்ளி ஊராட்சி, பெரியபுத்துார் நர்சரியில் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''வேளாண் துறை சார்பில், பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகள்,

அன்னுார்:'ரசாயனம் கலக்காத விளை பொருட்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது' என, விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், விவசாயிகள் கூட்டம், வடவள்ளி ஊராட்சி, பெரியபுத்துார் நர்சரியில் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''வேளாண் துறை சார்பில், பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகள், அந்தத் திட்டங்களுக்கு, உரிய ஆவணங்களுடன், முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்,'' என்றார்.வேளாண் விஞ்ஞானி சுரேஷ் பேசுகையில், ''பொதுமக்களிடையே ரசாயனம் கலக்காத விளைபொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இயற்கை விளைபொருட்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. ரசாயனம் கலக்காத இயற்கை விளை பொருட்களை விளைவிக்க, அரசு ஊக்கமளிக்கிறது. விவசாயிகள் ரசாயனம் கலக்காத விளைபொருட்கள் அதிகளவில் விளைவிக்க முன்வரவேண்டும். தங்கள் தோட்டத்து மண் குறித்தும், அதில் உள்ள சத்துக்கள் குறித்தும், என்ன உரம் இடலாம் என்பது குறித்தும், மண் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் திவ்யா, உதவி வேளாண் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.உழவு மானியம் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு, மண்வள அட்டை வழங்கப்பட்டது. வடவள்ளி ஊராட்சி விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X