சூலுார்:சூலுார் தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் ராஜாமணி ஆய்வு மேற்கொண்டார்.தாலுகா அலுவலகங்களில், வருவாய்த்துறை உயரதிகாரிகளின் வருடாந்திர ஆய்வு பணி நடந்து வருகிறது. நேற்று காலை, சூலுார் தாலுகா அலுவலகத்துக்கு வந்த கலெக்டர் ராஜாமணி, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு செய்தார்.பிரிவு வாரியாக கோப்புகளை ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். ஆவணங்களை முறையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.ஆய்வின் போது, கலெக்டர் அலுவலக அதிகாரி ஜெயபால், தாசில்தார் மீனாகுமாரி, தலைமையிடத்து துணை தாசில்தார் நாட்ராயன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அரசகுமார், மண்டல தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE