கருமத்தம்பட்டி:சூலுார் மற்றும் கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் நகை பறிப்பு, வீடு புகுந்து திருடிய இரு கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூலுார் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில், வெளிமாநில கும்பல் ஒன்று தங்கியிருப்பதாக, சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், விஜயவாடாவை சேர்ந்த சுரேஷ்பாபு, சீனிவாசன் மற்றும் ரமணா என்ற பெண்ணையும் விசாரித்தனர். அதில், அவர்கள் நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு சவரன், மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், மேலும் ஒரு கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படையினர் ஆந்திரா சென்றனர்.இந்நிலையில், கருமத்தம்பட்டியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிய நால்வரிடம் போலீசார் விசாரித்தனர். முறையாக பதில் அளிக்காததால், ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சீனு, 20, சுப்பாராவ், 20, அங்கம்மா ராவ், 32, அவனது மனைவி அங்கம்மா, 28 என்பது தெரிந்தது.இவர்கள், கருமத்தம்பட்டி பகுதியில் ஐ.டி.,, ஊழியர் வீட்டில் நகை திருடியது, அரசு ஊழியரிடம் நகை பறித்ததும், சூலுார் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 24 சவரன் நகையை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE