கும்பாபிஷேக விழா துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிஷேக விழா துவக்கம்

Added : நவ 25, 2020
Share
மேட்டுப்பாளையம்:சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில் விருட்சபீடம் உள்ளது. இங்கு, 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்கள் (மரங்கள்) வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 27 சித்தர்களின் உருவச்சிலைகள், பஞ்ச லிங்கங்கள், பாதாள லிங்கம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று வாஸ்து பூஜை மற்றும் முதல் கால வேள்வியுடன் துவங்கியது.பவானி ஆற்றிலிருந்து

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அடுத்த கிச்சகத்தியூரில் விருட்சபீடம் உள்ளது. இங்கு, 27 நட்சத்திரங்களுக்கு உண்டான விருட்சங்கள் (மரங்கள்) வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 27 சித்தர்களின் உருவச்சிலைகள், பஞ்ச லிங்கங்கள், பாதாள லிங்கம் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா, நேற்று வாஸ்து பூஜை மற்றும் முதல் கால வேள்வியுடன் துவங்கியது.பவானி ஆற்றிலிருந்து புனித தீர்த்த குடங்களையும், முளைப்பாரிகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இன்று காலை, இரண்டாம் கால வேள்வி, மாலையில், மூன்றாம் கால வேள்வி, ஆதிபராசக்தி, பஞ்சலிங்கம், பாதாள லிங்கம் ஆகியவற்றுக்கு, எண் வகை மருந்து சாத்துதல், திருநீறு பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடக்கின்றன.விழாவின் முக்கிய நாளான, 26ம் தேதி காலை, 7:35 மணியிலிருந்து, 8:30க்குள், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை, விருட்ச பீடம் சாக்த லட்சுமிதாச சுவாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X