பொது செய்தி

தமிழ்நாடு

பூத்துக்குலுங்கும் கார்த்திகைப்பூ

Added : நவ 25, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை மலைப்பகுதியில், பரவலாக பூத்துக்குலுங்கும் கார்த்திகைப்பூக்களை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.வால்பாறையில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வனப்பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மழைப்பொழிவு குறைந்த நிலையில், எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.இந்நிலையில், வால்பாறையை

வால்பாறை:வால்பாறை மலைப்பகுதியில், பரவலாக பூத்துக்குலுங்கும் கார்த்திகைப்பூக்களை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.வால்பாறையில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வனப்பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. மழைப்பொழிவு குறைந்த நிலையில், எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள அய்யர்பாடி, சின்கோனா, கவர்க்கல், கருமலை, காஞ்சமலை, அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட்களில், கார்த்திகை மாதம் மட்டுமே பூக்கும் வெள்ளை நிறப்பூக்கள் சாலையோரம் பூத்துக்குலுங்குகின்றன. பரவலாக பூத்துக்குலுங்கும் கார்த்திகைப்பூவை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X