கடலுார் : காற்றின் வேகத்தைப் பொறுத்து, தேவை ஏற்பட்டால் மட்டுமே மின் நிறுத்தம் செய்யப்படும் என, மின் துறை அதிகாரி தெரிவித்தார்.
நிகர் புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் முன்னதாக மின்நிறுத்தம் செய்யப்படும் என, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சத்தியநாராயணன் கூறுகையில், அந்தந்த பகுதிகளில் வீசும் காற்றின் வேகத்தை பொறுத்து முடிவெடுக்க துணை மின் நிலையங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மழை பெய்தாலும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். புயல் கரையைக் கடப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் நேரத்தில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படும்.புயல் கரையைக் கடந்த பிறகு சேதங்கள் ஏற்பட்டால் சரி செய்து விரைவாக மின்சாரம் வழங்கப்படும் என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE