அரசியல் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மதுக்கடை அகற்ற வலியுறுத்தல்

Added : நவ 25, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை - உடுமலை ரோட்டில், பூவலப்பருத்தி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலை அப்பகுதியிலுள்ள மக்கள், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, போராட்டம் நடத்த திட்டமிட்டு கூட்டமாக திரண்டனர்.மக்கள் கூறுகையில், 'உடுமலை ரோட்டையொட்டியுள்ள டாஸ்மாக் கடையில் இருந்து, குடி போதையில் வெளியே வரும், 'குடி'மகன்கள், ரோட்டோரம் படுத்து உருளுவதால் விபத்துக்கள்

ஆனைமலை:ஆனைமலை - உடுமலை ரோட்டில், பூவலப்பருத்தி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலை அப்பகுதியிலுள்ள மக்கள், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, போராட்டம் நடத்த திட்டமிட்டு கூட்டமாக திரண்டனர்.மக்கள் கூறுகையில், 'உடுமலை ரோட்டையொட்டியுள்ள டாஸ்மாக் கடையில் இருந்து, குடி போதையில் வெளியே வரும், 'குடி'மகன்கள், ரோட்டோரம் படுத்து உருளுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.டாஸ்மாக் கடைக்கு அருகிலுள்ள ஓட்டல், கடைகளில், மது அருந்த அனுமதிப்பதுடன், குப்பையை பி.ஏ.பி., கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்,' என்றனர். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆழியாறு போலீசார், சமரச பேச்சு நடத்தியதால், மக்கள் போராட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X