புவனகிரி : புவனகிரி அருகே பூதவராயன்பேட்டையில் ஒன்றிய விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை முகாம் நடந்தது.
ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் வரவேற்றார் . மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ரமேஷ் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் முன்மொழிவு படிவம், ஆதார் அட்டை நகல், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகலுடன் உரிய தொகையை செலுத்தி பயன்பெற கூறினார். துணை வேளாண் அலுவலர் மணி நன்றி கூறினார் .ஏற்பாடுகளை வேளாண் பகுதி உதவி அலுவலர் நாகரத்தினம் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE