பொது செய்தி

தமிழ்நாடு

கடல் சீற்றம்: படகுகள் நிறுத்தி வைப்பு

Added : நவ 25, 2020
Share
Advertisement
கிள்ளை : பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் நேற்று அதிகமாக காணப்பட்டதால், மீனவர்கள் படகுகளை, பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.வங்க கடலில் உருவாகியுள்ள 'நிகர்' புயல் சென்னை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, கரையை கடக்கும்என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை முடசல் ஓடைகடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், இரண்டு

கிள்ளை : பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் நேற்று அதிகமாக காணப்பட்டதால், மீனவர்கள் படகுகளை, பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

வங்க கடலில் உருவாகியுள்ள 'நிகர்' புயல் சென்னை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, கரையை கடக்கும்என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை முடசல் ஓடைகடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், இரண்டு நாட்களாக மீன் பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.

நேற்று முதல் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடல் பகுதியில், காற்றுடன், கடல் சீற்றம் அதிகமாகஇருந்தது.பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், படகுகளை, கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்கு தளம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X