சென்னை:மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை அவசரமாக விசாரிக்க கோரியதை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை.
தமிழகத்தில் மருத்துவ கல்லுாரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் இயற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஒப்புதல் வரும் முன் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவர்னரின் ஒப்புதலும் கிடைத்தது.
இந்த ஒதுக்கீட்டின்படி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்றனர். இந்நிலையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடப்பதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் ஹேமலதா அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார்.
இடஒதுக்கீட்டால் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் வழக்கு பட்டியலிட்டு வரும்போது விசாரிப்பதாக தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE