சென்னை:ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம் அளித்தார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் துரைமுருகன் , பொன்முடி ,ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன்,தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:பேரறிவாளன் உட்பட ஏழு பேரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தினோம். விடுதலை விவகாரத்தில் பரிசீலித்து முடிவு செய்வதாக கவர்னர் கூறினார்.கவர்னருடன் வேறு விஷயங்களும் பேசினோம். அதை வெளியில் சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
'டங் சிலிப்' பேட்டி
கவர்னரை சந்தித்த பின் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறுகையில் ''பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். சட்டரீதியாக மனிதாபிமானமற்ற முறையில் இதற்கு கவர்னர் முடிவெடுக்க வேண்டும் '' என்றார்.அதாவது 'மனிதாபிமான முறையில்' என சொல்வதற்கு பதிலாக 'மனிதாபிமானமற்ற முறையில்' என தவறாக உச்சரித்தார். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் தேனி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில் ''உதயநிதி தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளார். அவரது பயணம் வெற்றிக ரமாக முடியும். இந்த தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்திக்கும்'' என்றார்.அ.தி.மு.க., எனச் சொல்வதற்கு பதிலாக தி.மு.க., எனக் கூறிவிட்டார். தங்கதமிழ்செல்வனின் பேச்சும் சமூக வலைதளங்களில் பரவி நகைச்சுவைக்கு உள்ளானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE