உடுமலை:உடுமலை பகுதிகளில் காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளநிலையில், திடீரென விளைவித்த காய்கறிகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பி.ஏ.பி., பாசனம், அமராவதி பாசனம் மற்றும் இறவை பாசனத்தில், ஏறத்தாழ, 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு, உடுமலை பகுதிகளில் பிரதான சாகுபடியாக இது மாறியுள்ளது.இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள், உடுமலை காய்கறி சந்தை, கமிஷன்கடைகள் மற்றும் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, காய்கறி பயிர்சாகுபடி மற்றும் அறுவடை பாதித்துள்ள நிலையில், விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பூசணிக்காய், கிலோ, 50காசு, பீர்க்கன், 5 ரூபாய், புடலை -2, வெண்டை - 2,தக்காளி - 5, பீட்ரூட் - 6, முள்ளங்கி - 2, பாகற்காய் - 10, சின்ன வெங்காயம் - 50 முதல் 60 ரூபாய் என காய்கறிகளின் விற்பனை விலை சரிந்துள்ளது. கிலோ, 15 ரூபாய்க்கு மேல் விற்றுக்கொண்டிருந்த காய்கறிகளின் விலை திடீரென குறைந்துள்ளதால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுசூதனன் கூறியதாவது:பந்தல் காய்கறி சாகுபடிக்கு, 3.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படுகிறது.தொடர்ந்து, நாற்று, விதை, உரம், ஆட்கள் கூலி என சாகுபடி செலவு, 60 ஆயிரம் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை வருகிறது.தற்போதைய சூழலில், சின்ன வெங்காயம் விலை மட்டும் ஓரளவு உயர்ந்து காணப்படுகிறது. ஆனால், தற்போது மழை காரணமாக அறுவடை செய்ய முடியாது. இருப்பு வைத்த வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது.இருப்பு வைக்க முடியாதது, கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு மழையில் பாதித்த காய்கறிகளை கொண்டு செல்ல முடியாது என காரணம் கூறி, வியாபாரிகள் 'சிண்டிகேட்' காரணமாக, விலைஆகிய காரணங்களினால், உற்பத்தி செய்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்தல், விலை சரியும் போது இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர்பதன கிடங்கு வசதி, வியாபாரிகள் சிண்டிகேட் அமைக்காமல் அதிகாரிகள் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிப்பதிலிருந்து காப்பாற்றமுடியும். அரசும், வேளாண் சார்ந்த துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE