வால்பாறை:ஓட்டுச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாமில், அ.தி.மு.க.,வினர் அத்துமீறி செயல்பட்டதாக, தி.மு.க., புகார் தெரிவித்துள்ளது.வால்பாறை நகர தி.மு.க.,பொறுப்பாளர் பால்பாண்டி, கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம் உள்ள, 68 ஓட்டுச்சாவடிகளில், கடந்த, 22 மற்றும், 23 ஆகிய இரு நாட்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதில், ஹைபாரஸ்ட்டில், பூத் எண்கள், 231; தலநாரில், 168; வில்லோனியில், 175, உள்ளிட்ட ஓட்டுச்சாவடிகளில், அலுவலர்கள் வரவில்லை.இதனை அ.தி.மு.க.,வினர் சாதமாக பயன்படுத்தி, சிறப்பு முகாமுக்கு வந்த மக்களிடம், முதல்வர், அமைச்சர் படம் பதித்த துணிப்பைகளில் பரிசு பொருட்கள் வினியோகம் செய்தனர். ஆளுங்கட்சியினரின் இந்த செயல் குறித்து விசாரணை நடத்த தவறும்பட்சத்தில், உயர்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது வழக்கு தொடரப்படும். இனி வரும் முகாம்களிலும் இது போன்ற அத்துமீறல் நடந்தால், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE