பொது செய்தி

இந்தியா

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

Added : நவ 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சபரிமலை :சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது; இதனால் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேநேரத்தில், தேவசம் போர்டு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு, நேற்று உறுதி செய்யப்பட்டது. தகவல் கொரோனா கட்டுப்பாடுகளால், கேரள மாநிலம் சபரிமலையில், தினமும், 1,000 பேரும், சனி, ஞாயிறு தினங்களில், 2,000
 சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்

சபரிமலை :சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது; இதனால் முடிவு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேநேரத்தில், தேவசம் போர்டு ஊழியர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு, நேற்று உறுதி செய்யப்பட்டது.


தகவல்



கொரோனா கட்டுப்பாடுகளால், கேரள மாநிலம் சபரிமலையில், தினமும், 1,000 பேரும், சனி, ஞாயிறு தினங்களில், 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நவ., 1 முதல், இதற்கான முன்பதிவு துவங்கிய சில மணி நேரத்தில் முடிந்து விட்டது. முன் பதிவில், தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காத பலரும், கார்த்திகை 1ம் தேதி முதல், விரதம் இருந்து வருகின்றனர். சபரி மலை வருமானம் குறைந்ததால் தேவசம்போர்டு, பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செ


latest tamil news



ய்துள்ளதாக, தகவல்

வெளியானது.இதனால், நவ., 23, 24ல், கூடுதல் முன்பதிவு துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில், கேரள சுகாதாரத்துறை தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
சுகாதாரத்துறை அனுமதி வழங்கினால் மட்டுமே, கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதில் அரசு முடிவு எடுக்க முடியும்.


நெருக்கடி



இது தொடர்பான வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கூடுதல் பக்தர்களை அனுமதிக்கும் போது, நிலக்கல் பரிசோதனை மையத்தில் நெருக்கடி ஏற்படும்.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதில் சுகாதாரத்துறைக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தில், வெள்ளை நிவேத்யம் கவுன்டரில் பணியில் இருந்த இருவருக்கு கெரோனா உறுதி ஆனது. இவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-நவ-202015:41:00 IST Report Abuse
Anantharaman Srinivasan பக்தியால் நான் உன்னை பலகாலம், .இருமுடிதாங்கியே வந்துள்ளேன். நிகழாண்டும் அதுபோல் எனக்கு அருள்வாயே
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
25-நவ-202013:58:20 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy தேர்தலுக்கும் கொரானாவிற்கும் நடுவில் நிற்கிறார்கள் கம்மிகள், நடுத்தெருவில் மக்கள் விட்டு விடுவார்களா என்ற பயம்.தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது கம்மியரசு. எப்படியும் இவர்களை சபரிமலை அய்யப்பன் தண்டிப்பார் ,
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
25-நவ-202012:42:13 IST Report Abuse
J.Isaac கட்டுப்பாடுகளை மதிக்காமல், மீறி பிடிவாதம் பிடித்தால் அனைவரையும் அனுமதி கொடுக்க வேண்டியதுதான். பட்டாதான் கஷ்டம் தெரியும். வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்து இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X