சென்னை:'புயல் காரணமாக, இம்மாதம், ௨௮ல் நடத்தப்பட இருந்த ஏர் கலப்பை பேரணி, டிச., 2க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
அவரது அறிக்கை:பார்லிமென்டில் விவாதம் நடத்தாமல், மத்திய அரசுஇயற்றிய தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள், 26ல் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இந்த போராட்டத்தில் காங்கிரசாரும், தொழிற்சங்கத்தினரும் திரளாக பங்கேற்க வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நவ., 28ல் நடத்த திட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி, புயல் சீற்றத்தால், டிச., 2க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE