பொது செய்தி

தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்க தாய் அற்புதம்மாள் வலியுறுத்தல்

Added : நவ 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜோலார்பேட்டை:பேரறிவாளனுக்கு, பரோல் நீட்டிக்க வேண்டும் என, அவரது தாய் அற்புதம்மாள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம், 9ல், ஒரு மாதம் பரோலில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு மருத்துவர்கள்

ஜோலார்பேட்டை:பேரறிவாளனுக்கு, பரோல் நீட்டிக்க வேண்டும் என, அவரது தாய் அற்புதம்மாள், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம், 9ல், ஒரு மாதம் பரோலில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு மருத்துவர்கள் ஆலோசனைபடி சிகிச்சை பெற்று வந்தார். பரோலை நீட்டிக்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நேற்று முன்தினம் பரோல் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வாரம் பரோல் நீட்டிக்கப் பட்டது. இது குறித்து, அவரது தாய் அற்புதம்மாள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பேரறிவாளன் உடல் நிலை பாதிப்பை கருத்தில் கொண்டே, பரோல் நீட்டிக்கப்பட்டது. பேரறிவாளனுக்கு விடுதலை கிடைக்கும் வரை, அவரது பரோலை முதல்வர் பழனிசாமி நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
25-நவ-202012:31:56 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan முதலில் அந்த எழுவரையும் தூக்கிலிட கவர்நர் உத்தரவிட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X