சென்னை:தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'தீ' எனும் மொபைல் போன் செயலியை,மக்களின் பயன்பாட்டிற்காக, முதல்வர் பழனிசாமி .,துவக்கி வைத்தார்.
தீயணைப்புத் துறை சேவைகளை, பொது மக்கள் எளிதில் பெறவும், தீ விபத்து, வெள்ளம், ஆழ் துளைக் கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயு கசிவு உள்ளிட்ட, அவசர உதவிகளுக்கு எளிதில் அணுக, 'தீ' மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் அழைத்தால், சம்பவ இடத்திற்கு, 10 நிமிடத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதற்காக, 'தீ' மொபைல் செயலியுடன் கூடிய கைக் கணினியை, தீயணைத்துத் துறை இயக்குனர் ஜாபர் சேட்டிடம், முதல்வர் பழனி்சாமி., தலைமைச் செயலகத்தில் வழங்கினார். பொதுமக்கள் தங்கள் போனில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சண்முகம், உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி கலந்து கொண்டனர்.
தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்!
மதுரை, தல்லாகுளம் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு வீரர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா, 10 லட்சம் ரூபாய்; அரசு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் என, மொத்தம், 25 லட்சம் ரூபாய் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில், அரசுப் பணி வழங்கவும், முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, உயிரிழந்த தீயணைப்பாளர்கள் குடும்பத்திற்கு, தலைமைச் செயலகத்தில்,
தலா, 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE